January 2, 2018
தண்டோரா குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் `தளபதி 62′ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ‘அங்காமலே டைரீஸ்’, ‘ஸோலோ’ ஆகிய படங்களில் பணிபுரிந்த கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.