January 2, 2018 தண்டோரா குழு
சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் முதல்முறையாக, VAT வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மதிப்பு கூட்டு சேவைகளுக்கான வரி(VAT),செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் வரி விதிப்பு முறை இதுவரை இல்லை. இந்நிலையில், அந்த இரண்டு நாடுகளில் முதல்முறையாக மதிப்பு கூட்டு சேவைகளுக்கான வரி(VAT) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக அரசுகளின் வருமானத்தின் பெரும் பகுதி எண்ணெய் ஏற்றுமதி மூலமாக வருகிறது.இந்நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக உணவுப்பொருட்கள், துணிகள், எலக்ட்ரானிக்ஸ், தொலைபேசி கட்டணம், தண்ணீர், மின்சார கட்டணம், ஆகியவற்றுக்கு 5 சதவிகிதம் அளவுக்கு வாட் (மதிப்பு கூட்டு வரி) வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்,மருத்துவ சிகிச்சை, நிதி சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றிற்கு VATவரி செலுத்த தேவையில்லை.சவூதி அரேபியாவில், புகையிலை மற்றும் குளிர்பானங்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்பட்ட சில மானியங்களில் வரி குறைக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன், குவைத், ஓமன், மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில், VAT வரியை அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தனர்.ஆனால்,சில காரணங்களால் 2019 ஆண்டில் அமல்படுத்தலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.