January 2, 2018 தண்டோரா குழு
உலகம் முழுவதும் கடந்த ஞாயிறு மாலை முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியது. இந்தியாவில் நேற்று நள்ளிரவில் 2017ஆம் ஆண்டு விடைபெற்று 2018 புத்தாண்டு பிறந்தது.ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், கேக் வெட்டியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டு தினத்தில் தங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் குதூகலமாக அனைவரும் கொண்டாடினர். ஆனால், கோவை வேளாண் கல்லூரி உணவு பதன்செய் பொறியியல்துறை இறுதியாண்டு படிக்கும் 50 மாணவர்கள் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைக்களுடன் தங்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ளது மெர்சி ஹோம் மர்ஜுத் பேகம் நடத்தி வரும் இந்த ஹோமில் 30 எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருந்து வருகின்றனர். உலகமே புத்தாண்டை சிறப்பாக கொண்டாடிகொண்டிருக்கும் போது தங்கள் வாழ்நாளை எண்ணிக்கொண்டு வாழும் இவர்களுக்கு அந்த ஹோம் தான் வாழ்க்கை என்று வாழ்ந்து வருகிறார்கள்.
புத்தாண்டு தினத்தன்து கவலைகளை மறந்து அவர்களை சந்தோஷப்படுத்த கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் மெர்சி ஹோமிற்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினர். இதுமட்டுன்றி அவர்களுடன் மதிய உணவு அருந்தியும், குழந்தைக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கியும் கொடுத்தனர்.மேலும், அன்றைய தினத்தில் அவர்களுடன் விளையாடி குழந்தைகளை கவலையைமறந்து சந்தோஷப்படுத்தினர்.
இது குறித்து வேளாண்மை கல்லூரி மாணவர் சிவகர்ணன் கூறும்போது,
“நாங்கள் முதலில் புத்தாண்டை ஏதேனும் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தான் கொண்டாட முடிவு செய்தோம். அப்போது தான் மெர்சி ஹோம் குறித்தும் அங்கு எச்.ஐ.வி பதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளனர் என்பது எங்களுக்கு தெரியவந்தது. எச்.ஐ.வி என்ற காரணத்தால் அந்த ஹோமிற்கும் வரவும் குழந்தைகளுடன் நேரம் களிக்கவும் பலர் தயங்குகின்றனர் ஆனால் எச்.ஐ.வி என்பது பரவும் நோய் இல்லை என்பதையும் அவர்களும் மற்ற குழந்தைகளை போல் பார்க்க வேண்டும் என்பதை உணர்த்த எண்ணினோம். அதனால் புத்தாண்டை சிறப்பான முறையிலும் மன நிறைவுடனும் கொண்டாட நாங்கள் அங்கு சென்றோம்.
குழந்தைகளை சந்தோஷப்படுத்த சென்ற எங்களுக்கு அவர்கள் தான் சந்தோஷத்தை கொடுத்தார்கள்.எங்களுடன் அவர்கள் விளையாடும் போது தங்கள் நோய்களை மறந்து அவர்கள் சந்தோஷப்பட்டனர். கவலைகளை மறந்து சிரித்த அவர்களுடைய சிரிப்பு எங்களை மென்மேலும் அங்கு செல்ல தூண்டியுள்ளது. விரைவில் மீண்டும் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.