• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வர் பதவி குறித்து ரஜினிக்கு திருமுருகன் காந்தி கேள்வி?

January 3, 2018 தண்டோரா குழு

பதவியாசை இல்லை என்று சொல்லும் ரஜினிகாந்த் நல்லக்கண்ணு ஐயாவை முதல்வராக்குவாரா என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினி டிசம்பர் 31ம் தேதி ரசிகர்கள் சந்திப்பின் போது தனிக்கட்சி தொடங்கப்போவதாக மேடையிலேயே அறிவித்தார். தனக்கு பதவி ஆசையும் இல்லை எனக் கூறினார். இதனால் மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில்,செய்தியாளர்களிடம் பேசிய திருமுகன் காந்தி,

ரஜினி ஒரு நடிகர் அவரை ரசிக்கலாம், அது வேறு.ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பாஜகவின் நெருக்கடியால் நடக்கிறது. ரசிகர்களைக் கொண்டு வந்து அரசியலில் நிறுத்தினால் அது எப்படி மக்களுக்கு பயன் அளிக்கும். எந்த அடிப்படையில் ரஜினி மக்களை அணுக நினைக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. 25 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாக சொல்கிறார், இந்த காலகட்டத்தில் ஈழப்போர் நடந்து முடிந்திருக்கிறது, ராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் புயலால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயிருக்கின்றனர்.விவசாயிகள் போராட்டம், அணுஉலை எதிர்ப்பு போராட்டம் இதில் எல்லாம் அவர் என்ன செய்தார்.

இதை வைத்து தான் அவர் மக்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ரஜினி பேசினால் மாற்றம் வரும் என்று இருப்பவர் ஏன் இந்த பிரச்னைகளில் எல்லாம் அமைதியாக இருந்தார் என்பதே என்னுடைய கேள்வி. தமிழ்நாட்டு சிஸ்டத்தின் தொடர்ச்சி இந்திய சிஸ்டத்தின் தொடர்ச்சி தானே. இந்திய சிஸ்டம் ஒழுங்காக இருந்திருந்தால் தமிழ்நாட்டு சிஸ்டம் ஒழுங்காக இருந்திருக்கும் அல்லவா.பதவியாசை இல்லை என்று சொல்லும் ரஜினிகாந்த் நல்லக்கண்ணு ஐயாவை முதல்வராக்குவாரா என்றும் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க