January 4, 2018
tamil.samayam.com
ஐபிஎல் 2018 தொடரில் அணிகள் எந்த வீரர்களை தக்க வைக்க உள்ளது என்ற பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் (ஐபிஎல்) வெற்றிகரமாக நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சுமார் 2 ஆண்டுகள் சூதாட்ட தடைக்கு பின் மீண்டும் இந்த ஆண்டு களமிறங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், வரும் ஜனவரி 27, 28ல் நடக்கவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்கவைக்கலாம், எந்த வீரர்களை விடுவிக்கலாம் என்ற குழப்பத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியின் கேப்டன் தோனி என்பது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. தவிர, ரெய்னாவும் சென்னை அணி தக்கவைக்கும் விஷயம் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மற்ற அணிகள் எந்த எந்த வீரர்களை தக்க வைக்கவுள்ளது என்ற இறுதி பட்டியலை இன்று மாலை பிசிசிஐ.,யிடம் ஐபிஎல்., அறிவிக்கவிக்க வேண்டும். இதனால் இன்று மாலை இதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகும்.