January 4, 2018 தண்டோரா குழு
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் யானைகளுக்கு ஆண்டு தோறும் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான யானைகள் நல வாழ்வு முகாமை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் இன்று (4ம் தேதி) துவங்கி பிப். 20ம் தேதி வரை 48 நாட்கள் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடக்கவுள்ளது.இந்த முகாமில், யானைகளுக்கு சத்தான இயற்கை, மூலிகை உணவுகள், ஆரோக்கியத்திற்கான குளியல் மற்றும் விளையாட்டு, மருத்துவம், உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் மூலம் புத்துணர்வு அளிக்கப்படுகிறது.
மேலும், நலவாழ்வு முகாமில் தமிழகத்தில் இருந்து 31, புதுச்சேரியில் இருந்து 2 யானைகள் பங்கேற்றுள்ளன. முகாமிற்கு வந்த யானைகளும் பவானி ஆற்றில் புனித நீராடிவிட்டு,நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.