January 4, 2018 தண்டோரா குழு
பிரபல கர்நாடக இசை கலைஞர், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் ராதா விஸ்வநாதன் நேற்று(ஜன 3) காலமானார்.
பிரபல வாய்ப்பாட்டு கலைஞரான ராதா விஸ்வநாதன்(83) மறைந்த புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் ஆவார். இவர் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று(ஜன 3) காலை, பெங்களூரின் Fortis மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மருத்துவமனையிலேயே காலமானார்.
ராதா விஸ்வநாதன் பாடிய Venkatesa Subrabaatham, Vishnu Sahasranama, மற்றும் Bhaja Govindam ஆகிய பாடல்கள் உலகமெங்கும் உள்ள இந்து கோவில்கள்
மற்றும் வீடுகளில் பாடப்பட்டுவருகிறது.
மறைந்த ராதா விஸ்வநாதனுக்கு சந்திரசேகர் மற்றும் ஸ்ரீனிவாசன் என்னும் இரண்டு மகன்களும், சுபலட்சுமி என்னும் மகளும்,ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்னும் இரண்டு பேர குழந்தைகளும் உண்டு.
மேலும்,கடந்த 2004ம் ஆண்டு, டிசம்பர் மாதம், எம்எஸ்.சுபலட்சுமி, தனது 88வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.