• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிடா வெட்டி விருந்தா? ரஜினிக்கு பீட்டா அமைப்பு கடிதம்

January 5, 2018 தண்டோரா குழு

அரசியலில் களத்தில் இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் 2ம் கட்டமாகசென்னை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து புகைபடம் எடுத்துக்கொண்டார். அப்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பை கேட்டதும் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இதற்கிடையில்,கடந்த மாதம் 28ம் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார்.அப்போது, ரசிகர்களுக்கு கெடா வெட்டி விருந்து கொடுக்கவேண்டும் என்பது எனது ஆசை ஆனால், ராகவேந்திரா திருமண மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, ரஜினியின் நிறைவேற்றும் விதமாக அவரது ரசிகர்கள் மதுரையில் கெடா விருந்து கொடுக்க உள்ளனர். இதற்காக, 1400 ரசிகர் மன்றங்களை சேர்ந்த நிர்வாகிகளும் ஒரே இடத்தில் சந்திக்க இருக்கின்றனர். வரும் 7ம் தேதி மதுரை அழகர்கோவிலில் நிகழும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது ரஜினி ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த 1000 உறுப்பினர்களுக்கு கெடா வெட்டி விருந்து கொடுக்க இருக்கின்றனர். இதனை மதுரை ரஜினி மன்றம் செயலாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,கோயிலில் கிடா வெட்டுவது சட்டத்திற்கு புறம்பானது, எனவே கிடா விருந்தை கைவிடவேண்டும் என்றும் விருந்தை தடுத்து நிறுத்தும் வகையில் பீட்டா அமைப்புரஜினிகாந்த்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.இதனால் மதுரை அழகர் கோவிலில் கிடா பலி இல்லை; ஆனால் விருந்து உண்டு என மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க