January 5, 2018 தண்டோரா குழு
இத்தாலி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்திய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் உள்ள டோலாஸ் அரண்மனையின் அருங்காட்சியகத்தில், இந்தியாவின் முகலாய ஆட்சி காலத்தின் பாரம்பரிய நகைகள்,கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.இந்த கண்காட்சியின் இறுதி நாள் அன்று, அதாவது கடந்த புதன்கிழமை
(ஜன 3) அன்று, அந்த பாரம்பரிய நகைகளில் இருந்து சில நகைகள் திருடப்பட்டிருந்தது.
திருடப்பட்ட நகைகள், தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றால் செய்யப்பட்டது.மேலும், அதன் மதிப்பு பல மில்லியன் யூரோ என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து இத்தாலி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்,திருடர்களை கண்டுபிடிக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் அவர்களை கைது செய்து, அந்த பாரம்பரிய நகைகளை மீட்போம் என்று தெரிவித்துள்ளனர்.