January 6, 2018 தண்டோரா குழு
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை கிண்டலடித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டுவீட் செய்துள்ளார்.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இன்று தண்டனை விவரங்களை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். அதில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவிற்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்ட பூல் சந்த், மகேஷ் பிரசாத், பேக் ஜூலியஸ், சுனில்குமார், சுசில்குமார், சுதிர்குமார் மற்றும் ராஜா ராமுக்கு 3.5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவை கிண்டலடித்து எச் .ராஜா டுவீட் செய்துள்ளார்.
அதில், மாடு திங்கவேண்டியதை லாலு பிரசாத் தின்றதால் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழும் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.