January 8, 2018 தண்டோரா குழு
மீனவ, விவசாயிகள் நலனில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆற்றிய உரையில், தமிழகத்தில் 10 இடங்களில் காய்கறிக் கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும். கறவை பசு, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினையில், சட்ட உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு உறுதியாக உள்ளது.1.88 கோடி குடும்பங்குளுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ரூ.14,719 கோடி செலவில் ஊதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஊதிய திருத்தம் தொடர்பாக அரசு பணியாளர் கோரிக்கையை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை அரசு தொடர்ந்து வழங்கும் என்று நம்புகிறேன். புதுமைப் பள்ளி, கனவு ஆசிரியர் விருது வழங்கும் திட்டத்துக்கு ஆளுநர் பாராட்டியுள்ளார். பெண்கள் ஸ்கூட்டர் வாங்க மானியத்தொகை ரூ.35,000 வழங்கப்படும்.மாவட்டங்களில் தொழில் முனைதல் மற்றும் ஊரக தொழிலை ஊக்குவிக்க உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனங்கள் அமைக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி தேசிய சாலையாக மேம்படுத்த திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது.
மேலும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய அரசு உதவியுடன் ரூ.200 கோடி ஒதுக்கப்படும். நீராபானம் விற்பனை, தென்னை விவசாயிகளுக்கு மிகப்பெரிய பயனளிக்கிறது. அண்ணா பல்கலை மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காக ஜப்பான் உதவியுடன் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என ஆளுநர் கூறியுள்ளார். அதைப்போல் ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லம் அமைக்கும் அரசின் முயற்சிக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ள ஆளுநர் நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் 7-வது ஊதியக்குழு பரிந்துரை செயல்படுத்தப்பட்டுள்ளது என பன்வாரிலால் கூறியுள்ளார்.