January 8, 2018 தண்டோரா குழு
சர்வதேச பட்டம் விடும் போட்டியை அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 7) தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலத்தின்அகமதாபாத் நகரிலுள்ள சபர்மதி ஆற்றுக்கரையில், சர்வதேச பட்டம் விட்டும் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த போட்டியை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் ரூபாணி நேற்று(ஜன 7) தொடங்கி வைத்தார்.
குஜராத்தில் சுமார் ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் இங்கிலாந்து,தென் கொரியா, மலேசியா, சீனா, இந்தோனேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட 44 நாடுகளில் இருந்து, சுமார் 150 பேர் இந்த போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர். மேலும், இந்தியாவின் 18 மாநிலங்களில் இருந்து, சுமார் 100 பேரும் அகமதாபாத் நகரில் இருந்து நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்துக்கொண்டனர்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் இந்த போட்டியில் பங்குபெற இந்தியா வந்துள்ளனர். அதேபோல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் இதில் கலந்துக்கொண்டனர். குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில், சுமார் 8 நாள், இந்த போட்டி நடைபெறும். இந்த பட்டம் விடும் விழா, சுமார் 3 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும்” என்று அந்த மாநிலத்தின் முதலைமைச்சர் தெரிவித்துள்ளார்.