January 9, 2018
tamil.samayam.com
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் நடக்கிறது. இதில் தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சுலப இலக்கு:
தென் ஆப்ரிக்க அணி, இரண்டாவது இன்னிங்சில், 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சொதப்பல் துவக்கம்:
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணி, துவக்க முதலே தென் ஆப்ரிக்காவின் வேகத்தில் தடுமாறியது. முரளி விஜய் (13), தவான் (16), புஜாரா (4), கோலி (28), ரோகித் (10), சகா (8), பாண்டியா (1) என வரிசையாக பெவிலியன் திரும்பினர். பின் வரிசை வீரர்களும் சோபிக்காத நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி 72 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பிளாண்டர் அதிகபடமாக 6 விக்கெட் கைப்பற்றினார். மார்னே மார்கல், ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.