January 9, 2018 தண்டோரா குழு
கோவை அருகே கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் வாகனத்தை யானை தாக்க முயற்சிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோவையை அடுத்த மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த பெண் காட்டு யானை வேகமாக ஒடி வந்து, வனத்துறையினர் வாகனத்தை தாக்க முற்பட்டது. உடனடியாக சுதகரித்த ஒட்டுநர் வாகனத்தை பின்நோக்கி எடுத்தால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கபட்டன. இதை தொடர்ந்து யானைகளை சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.