January 10, 2018
awesomecuisine.com
தேவையான பொருட்கள்
எண்ணெய் – இரண்டு தேகரண்டி
நெய் – இரண்டு டீஸ்பூன்
சீரகம் – இரண்டு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – மூன்று (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – ஒரு கையளவு
பாசுமதி அரிசி – இரண்டு டம்ளர்
உப்பு, தண்ணீர் – தேவைகேற்ப
செய்முறை
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா போட்டு நன்றாக வதக்கவும். பிறகு ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு கிளறி தண்ணீர் மூன்று டம்ளர் மற்றும் உப்பு போடவும். பிறகு புதினா, நெய் துவி வேகவிடவும். ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.