January 10, 2018 தண்டோரா குழு
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை நேரில் சந்தித்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் ஆறுமுகசாமி விசாரணையில் சம்பந்தப்பட்டவர்களே வாக்குமூலமாக கொடுத்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம்ஆண்டுசெப்டம்பர் 22-ஆம் தேதிஉடல் நலகுறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்ததையடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அவர் கடந்த நவம்பர் மாதம் தனது விசாரணையை தொடங்கினார்.
இந்நிலையில்,அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம் மோகன் ராவ், கைரேகை பெற்று தந்த மருத்துவர் பாலாஜி ஆகியோர் சந்தித்துள்ளதாக ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் அவர்களே வாக்குமூலம் அளித்துள்ளனர். அதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் செப்டம்பர் முதல்வாரமும், டிசம்பர் 4-ஆம் தேதியும் சந்தித்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.