• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மக்களின் உயிரை காப்பாற்ற ஓடும் ஆம்புலன்ஸ்களின் பரிதாப நிலை !

January 10, 2018 தண்டோரா குழு

இன்றைய நவீன உலகில் மருத்துவத்துறையின் அபார வளர்ச்சியே, இறப்பின் தருவாயில் உள்ளவர்களையும் உயிர்த்தெழச் செய்வது தான். மனித உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் எந்த ரூபத்திலும் பாதிப்புவரலாம்.வாகன விபத்து, நெஞ்சு வலி, பிரசவ வலி என…முக்கியமான தருணங்களில் பாதிக்கப்பட்ட உயிரை உடனடியாகமீட்டு, தங்களின் உயிரை பற்றியும் கவலைப்படாமல் மருத்துவர் கைகளில் ஒப்படைக்கும் மகத்தான பணியை, ஆம்புலன்ஸ் டிரைவர்கள் செய்கின்றனர். இதன் மகத்துவம் கருதிதான், மத்திய அரசு, மாநில அரசுகளோடு இணைந்து 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்துகிறது. இதுதவிர, தனியார் மருத்துவமனைகள், அமைப்புகளும் இச்சேவையை பயன்படுத்துகின்றன

அவசர நேரில் விரைவில் ஓடும் ஆம்புலன்ஸ் திடீரேன நடுரோட்டில் நின்றால் நிற்பது ஆம்புலன்ஸ் மட்டுமாக இருக்காது ஒரு மூச்சாக தான் இருக்கும். அந்த அளவிற்கு ஆம்புலன்ஸின் சேவை இருக்கும்.கோவை மாவட்டத்தில் 38 ஆம்புலன்ஸ்கள் உள்ளது. அதில் 3 பைக் ஆம்புலன்ஸ், 2 நியோனட்டல் ஆம்புலன்ஸ்களும் அடங்கும்.இதில் நகருக்குள் அதவாவது ரயில் நிலையம் முதல் சித்ரா விமான நிலையம் வரை 6 ஆம்புலன்ஸ்கள் ஓடுகிறது. சிட்டிக்குள் ஓடும் இந்த ஆம்புலன்ஸிற்கு ஒரு நாளைக்கு 12 அழைப்புகள் என குறைந்தது மாதம் 350 அழைப்புகளும் மற்ற வண்டிகள் 200 அழைப்புகளும் வருகிறதாம்.

இதில்,பரிதாபமான நிலை என்னவென்றால் 24மணி நேரமும் பிஸியாக ஓடும் இந்த ஆம்புலன்ஸ்களில் 10ல் 2 வண்டி ஏதேனும் ஒரு பிரச்சனையில் தான் ஓடுகிறதாம்.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் கூறும்போது,

கோவை மாவட்டத்தில் மட்டும் 135 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 2 சிப்ட் ஆக பணியாற்றி வருகிறோம்.10ல் 2 வண்டி ஏதேனும் ஒரு பிரச்னையில் தான் ஓடுகிறது என்பது உண்மை தான்.சரியான பராமரிப்பு பண்ணுவதில்லை, பொதுவாக எல்லா ஆம்புலன்ஸிற்கும் பவர் ஸ்டேரிங் தான். அந்த ஸ்டேரிங் சுத்த தேவைப்படும் ஆயில் பாக்ஸ் பெரும்பாலும் இங்கு ஓடும் எந்த ஆம்புலன்ஸிற்கு இருக்காது. இதனால் வழக்கமாகஸ்டேரிங் போல் தான் இங்குள்ள ஆம்புலன்சையும் ஓட்டமுடியும்.

இதிலும், தொழிலார்களுக்கு பெர்பாமன்ஸ் அடிப்படையில் தான் சம்பளம் தருவதாக சொல்கிறார்கள். அது எப்படி என்றால், நீங்கள் அதிகமாக மைலேஜ் கொடுத்திருக்க வேண்டும், செலவுகள் அதிகம் பண்ணிருக்க கூடாது என்பது தான். ஒரு உயிரை காப்பற்ற வாகனம் ஓட்டும் போது குறைந்த வேகத்தில் போய் மைலேஜெய் எப்படி மெய்ன்டயின் பண்ண முடியும். இது மட்டுமில்லாமல் பம்ப் லாக் செய்து விடுகிறார்கள் இதனால் வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. நகருக்குள் குறிப்பிட்ட வேகத்தில் செல்ல இது போதுமானது தான். ஆனால் நகருக்கு வெளியில் இருந்து அவசத்தில் இந்த வேகத்தில் எப்படி வருவது.

அதிலும் 70 ஆயிரம் கிலோமீட்டர் ஆம்புலன்ஸ் டயரை மெய்ன்டயின் பண்ணவேண்டுமாம் இது எப்படி சாத்தியம். கேட்டால் விரைவில் மாற்றலாம் என்கிறார்கள். அதைபோல் ஆம்புலன்சை ஜி.எச்சில் சுத்தம் செய்ய அனுமதிப்பதில்லை. வெளியில் சென்று சுத்தம் செய்ய நேரமும் கிடைப்பதில்லை. அதற்கு ஏதேனும் ஒரு அழைப்பு வந்துவிடுகிறது.இதன் காரணமாக சுத்தம் செய்யாமல் வண்டியை ஓட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வாகனம் ஓட்டும் எங்களுக்கு மட்டுமல்லாது அதில் பயணிக்கும் நோயாளிக்கும் உடன் வருபவர்களுக்கும் நோய் பரவும் ஆபாயம் ஏற்படுகிறது.

மேலும், எங்களுக்கு தங்குவதற்கு இடமில்லை. எங்களுடன் பெண் ஊழியர்களும் உள்ளனர். அவர்கள்பெரிதும் சிரமப்படுகிறார்கள். இதனால் எங்கள் தேவைகள் மட்டுமல்லாது தமிழகத்தில் ஓடும் ஆம்புலன்ஸ்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா ? என்று சம்பந்தப்பட்ட நிர்வாகம் தெரிந்து கொள்ளவேண்டும் என்றார்.

ஆபத்தில் உயிரை காப்பாற்றும் ஆம்புலன்ஸ் நடுவுவழியில் நின்று உயிர் போனால் யாரை குறைகூறுவது. இதனால் மனித உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சம்பந்தபட்ட நிர்வாகம் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்தால் சரியான நேரத்தில் பல உயிர்களை காப்பாற்றலாம்.

மேலும் படிக்க