• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நம்மை பிரிக்க நினைப்பவர் தலைவராக தகுதியற்றவர்.! விஜய் சேதுபதி விளாசல்.

January 11, 2018 tamil.cinemapettai.in

தமிழ் சினிமாவில் வருடத்தில் அதிக ஹிட் கொடுப்பவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர் இவரிடம் தற்பொழுது அரைடஜன் படங்கள் கையில் இருகின்றன வருடத்தில் கிட்ட திட்ட 4 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்வார் அடிக்கடி படம் பண்ணுவதால் தான் என்னை சுறு சுறுப்பாக வைத்துகொள்ள முடிகிறது என கூறியுள்ளார்.

இவர் சமீபத்தில் வார இதழில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் நம்மை பிரிக்க நினைப்பவர் தலைவனாக இருக்க தகுதியற்றவர் என விளாசியுள்ளார் இந்த செய்தி இணையத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து கூறியதாவது அரசியலில் ஏதாவது பிரச்சனை என்றால் அது கடைசியில் ஜாதிக்குள் போய் தான் முடிகிறது அப்படிதான் நீட் தேர்வு விஷயத்தில் மாணவி அனிதாவிற்கும் நடந்தது. அதுபோலதான் அனைத்து பிரச்சனையும் நடந்து முடிந்தது என நினைத்தோம் ஆனால் எந்த பிரச்சனையும் முடியாமல் அப்படியே தான் இருக்கிறது. பிரச்சனை இன்னும் அதிகமாய்கொண்டு தான் இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் அதிக சாதி உணர்வுடன் இருக்கிறார்கள், அதனால் அந்த சாதி உணர்வை இளைஞர்கள் அனைவரும் வெளியே தூக்கி எறியவேண்டும். அதுமட்டும் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற நல்ல நண்பர்கள்,நல்ல மனிதர்களின் உதவிதான் நம்மிடம் வேண்டும் அப்படி இருப்பவர்களிடம் சாதி மதம் பார்த்து தேர்ந்தெடுக்க முடியாது மேலும் நம்மை சாதி மதத்தால் பிரிக்க நினைப்பவர்கள் நண்பர்களாகவோ,தலைவர்களாகவோ இருக்க தகுதி இல்லாதவர்கள் என விஜய் சேதுபதி விளாசியுள்ளார்.

மேலும் படிக்க