January 12, 2018 awesomecuisine.com
தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் – ஐந்து (பத்து சென்டி மீட்டர் அளவிற்கு நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்)
பன்னீர் – ஒரு கப் (துருவியது)
வேகவைத்து மசித்த உருளைகிழங்கு – முக்கால் கப்
உப்பு – தேவைகேற்ப
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
சோல மாவு – கால் கப்
மைதா மாவு – கால் கப்
பொரிப்பதற்கு:
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சோல மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். இன்னொரு கிண்ணத்தில் துருவிய பன்னீர், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக பந்து போல் பிசையவும். பிசைந்ததில் சிறு உருண்டை எடுத்து அதன் நடுவில் பேபி கார்ன் சொருவி கரைத்த மாவில் முக்கி ரொட்டி தூளில் புரட்டி கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.