January 12, 2018
tamil.samayam.com
ஜம்பவான் தந்தை சச்சினுக்கு பிறந்த பிள்ளை என அர்ஜூன் மீண்டும் நிரூபித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கிளப் டி -20 போட்டிகள் நடக்கிறது. இதில் 18 வயதான இந்திய ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் பங்கேற்றார். ஆஸ்திரேலிய மண்ணிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் தனது தந்தை சச்சின் படைத்த சாதனைகள் போலவே அர்ஜூனும் ஆல் ரவுண்டராக அசத்தியுள்ளார். இதில் துவக்க வீரராக களமிறங்கிய அர்ஜூன் , 27 பந்தில் 48 ரன்கள் விளாசினார். தொடர்ந்து பவுலிங்கிலும் மிரட்டிய அர்ஜூன், 4 ஓவரில் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இவர்கள் தான் ரோல் மாடல்:
இதுகுறித்து அர்ஜூன் கூறுகையில்,’ எனக்கு சிறுவயது முதலே வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்பதே கனவு. இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தான் எனது ரோல் மாடல்கள்,’ என்றார்.