January 13, 2018 awesomecuisine.com
தேவையான பொருட்கள்
பாஸ்தா – ஒரு கப்
ஆலிவ் ஆயில் – இரண்டு டீஸ்பூன்
பூண்டு – 5௦ கிராம் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
துளசி இலை – இரண்டு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
பாஸ்தாவை சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எட்டு நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, அதை குளிர்ந்த தண்ணீரில் கழுவி ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி வைத்து கொள்ளவும். கடாயில் ஆலீவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, வெங்காயம் சேர்த்து லைட் ப்ரை செய்த பின் தக்காளி, துளசி இலை, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். வேகவைத்த பாஸ்தா சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.