January 17, 2018
தண்டோரா
விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஸ்கெட்ச். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றி விழாவும் அண்மையில் நடந்தது.
பொதுவாக நடிகர் விக்ரம் எப்பொழுதுமே மற்ற ஹீரோக்களை விட, அனைவரிடமும் ஜாலியாக பழகும் குணமுடையவர்.
இந்நிலையில் அந்த விழாவில் பேசிய நடிகர் விக்ரம், “நான் நடிகர் சூரியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் படத்தில் அவருடைய காட்சிகள் நிறைய இடம்பெறவில்லை” என்றும், “அடுத்து சூரி நாயகனாக நடித்தால் அந்த படத்தில் நான் காமெடி நடிகராக நடிக்க தயார் என்றும்” கூறினார்.