January 18, 2018
kalakkalcinema.com
தளபதி விஜய் ரசிகர்கள் தற்போது தளபதி-63 என்ற ஹேஸ்டேக்கை இணையத்தில் ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டி வருகின்றனர்.
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து தளபதி-62 படத்தில் நடிக்க உள்ளார், இதனையடுத்து தற்போது அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தளபதி-63 படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்தைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் தீயாக பரவத் தொடங்கியுள்ளன.
இதனை தளபதி ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் மாஸ் காம்போ என கூறி ட்ரெண்ட் செய்து தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர், எதுவாக இருந்தாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.