January 18, 2018 findmytemple.com
சுவாமி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி.
அம்பாள் : அருள்மிகு பவளக் கொடியம்மை.
மூர்த்தி : மூத்தப் பிள்ளையார், நடராசர், பஞ்ச மூர்த்திகள், விசுவநாதர், துர்க்கை, சூரியன், சந்திரன், நவக்கிரகம்.
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்.
தலவிருட்சம் : பவளமல்லி மரம்.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் சுக்கிரீவன், வாலிக்கு அஞ்சி, இங்கு வந்து வழிபடும்போது, வாலியும் இங்கு வந்துவிடவே சுக்கிரீவனை ஆபத்சகாயேஸ்வரர் அன்னப் பறவையாக மாறிக் காப்பாற்றியுள்ளார் என வரலாறு கூறுகிறது.
வழிபட்டோர் : வாலி, சுக்கிரீவன்.
பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
பூஜை விவரம் : நான்கு கால பூஜை.
திருவிழாக்கள் : பங்குனி உத்திரம்.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம், மயிலாடுதுறை.
கோயில் முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்,ஆடுதுறை அஞ்சல் – 612 101, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.