January 19, 2018 தண்டோரா குழு
திருப்பூரில் சிக்னலை மதிக்காத வந்த காவலர் வாகனம் பொதுமக்கள் மீது மோதியது மட்டுமில்லாமல்,பொதுமக்களை தாக்கியதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவர் இன்று(ஜன 19) மதியம் தனது சொந்த வேலை காரணமாக அவரது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் அவிநாசி சாலையில் உள்ள குமார் நகர் வழியே சென்றுள்ளார்.அப்போது அவ்வழியே வந்த காவல்துறை வாகனம் ஒன்று சிக்னலை மதிக்காமல் வந்ததோடு முனிராஜின் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ் காவல் வாகனத்தை ஓட்டி வந்த காவலர் அன்பழகனிடம் விளக்கம் கேட்க அன்பழகன் முனிராஜை தாக்கியுள்ளார் . இதனையடுத்து முனிராஜும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.இச்சம்பவத்தை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை சமரசம் செய்து வைக்க முற்பட்டனர்.
பொதுமக்களை தாக்கிய காவலரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும்,அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரியும் பாதிக்கப்பட்ட முனிராஜீடன் பொதுமக்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முனிராஜை சமரசம் செய்து காவல்நிலையம் அழைத்துச்சென்றனர் . இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.