January 20, 2018
tamilsamayam.com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக, முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பாலாஜி நியமிக்கப்பட்டார் .
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்.,) நடக்கிறது. இது வெற்றிகரமாக 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளது. இதில் சென்னை அணி, தங்களின் ஆஸ்தான வீரர்களான தோனி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்தது.
இந்நிலையில் தோனி வழக்கம் போல கேப்டனாக நியமிக்கப்படுவார் என ஏற்கனவே சென்னை அணி தெரிவித்திருந்தது. துணைக்கேப்டனாக சுரேஷ் ரெய்னாவை நியமித்தது. தற்போது அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்டீவன் பிளமிங் தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்றும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.