January 22, 2018
tamilsamayam.com
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா ஜோடி முன்னேறி அசத்தியது.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. இதன், கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஹங்கேரியின் டைமியா பாபோஸ் ஜோடி,ஆஸ்திரேலியாவின் எலின் பெர்ஷா, ஆண்டிரு விட்டிங்டான் ஜோடியை எதிர் கொண்டது.
இதன் முதல் செட்டை 6–2 என போபண்ணா ஜோடி எளிதாக வென்றது. அடுத்த செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய, போபண்ணா ஜோடி 6–4 என, மிகச்சுலபமாக கைப்பற்றியது.முடிவில், இந்தியாவின் போபண்ணா, ஹங்கேரியின் டைமியா பாபோஸ் ஜோடி, ஆஸ்திரேலியாவின் எலின் பெர்ஷா, ஆண்டிரு விட்டிங்டான் ஜோடியை 6–2, 6–4 என வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.