January 22, 2018
தண்டோரா குழு
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் ,சாய் பல்லவி, கிருஷ்ணா ஆகியோர் நடிக்கும் ‘மாரி 2’ வின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமானது.
அனைவரின் வாழ்த்துக்களுடன் இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது என தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதைப்போல் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 36’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. இதை பற்றி இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
இப்படம் வரும் 2018ன் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.