January 22, 2018
தண்டோரா குழு
சின்னத்திரையில் இருந்தது சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் என பல நட்சத்திரங்கள் இன்று வெள்ளி திரையில் முன்னணி பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.அந்த வரிசையில் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த தீனாவும் இடம் பிடித்துள்ளார்.
இவர்,ஏற்கனவே தனுஷின் பவர் பாண்டி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மலையாலத்தில் மெகா ஹிட்டான KattappanayileRithwikRoshan என்ற படத்தை தனுஷ் தமிழில் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் நாயகனாக நடிக்க தீனா கமிட்டாகி உள்ளார்.இதனையடுத்து தீனாவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.