January 24, 2018
tamilsamayam.com
இசையமைப்பாளர் டி.இமான் தற்போது 100வது படத்துக்கு இசையமைத்து வருகிறார். இவரின் நூறாவது படம் ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ டி.இமான் மியூசிக் கற்ற பிறகு கிபோர்டு பிளேயராக பணியாற்றினார்.
பின்னர் அவர் பல விளம்பர படங்கள் மற்றும் அதை தொடர்ந்து சின்னத்திரை சீரியலுக்கு இசையமைக்கத் தொடங்கினார். பின்னர் ‘காதலே சுவாசம்’ படம் மூலம் சினிமாவில் முழுநேர இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது 100வது படத்தை தொட்டுள்ளார்.இதுவரை இசை பயணத்தில் 125 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக டி. இமான் பெருமையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“இன்று 100 படங்கள், நாளை ஆயிரம் படங்கள் என்ற பேராசை கிடையாது. ஒவ்வொருவரும் தங்கள் கம்ப்யூட்டரில், போனில் இமானுக்கென்று தனி போல்டர் உருவாக்கி, அதில் காலத்தை வென்ற 100 பாடல்கள் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறியுள்ளார்.