January 24, 2018
தண்டோரா குழு
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சீனிவாசன்,அரசியல்,சமூகம், பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளை நகைச்சுவையுடன் வழங்கி வருபவர். 61 வயதாகும் இவர் பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர்.இந்நிலையில், சீனிவாசனுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.அதேசமயம் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.