January 25, 2018
cinepettai.com
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டுயிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘விவேகம்’ படம் ரசிகரகள் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.
அஜித் மற்றும் சிவா கூட்டணி இணையும் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் விவேகம் படத்தில் காமெடியனாக நடித்து இருந்தார் கருணாகரன். இவர் அஜித் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் .
கருணாகரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் 1995-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி கேங்ஸ்டராக நடித்திருப்பார். பாட்ஷா படத்தை ரீமேக் செய்ய வேண்டுமென்றால் அஜித் சார் தான் சரியான சாய்ஸ் என்றார்.
ஏனென்றால் அவர் தான் கேங்ஸ்டர் படங்களுக்கு சரியான ஹீரோ என்று பதில் அளித்துள்ளார். அஜித் இதற்க்கு முன் பில்லா, மங்காத்தா போன்ற படங்களில் கேங்ஸ்டராக நடித்து வெளிவந்து மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.