January 27, 2018
தண்டோரா குழு
11 வது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களமிறங்க உள்ளன.
இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னை அணி மீண்டும் களமிறங்க உள்ளதால் சி.எஸ்.கே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சிஎஸ்கே ஏற்கனவே தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை அணியில் தக்கவைத்துக் கொண்டது. தமிழரான அஸ்வினை தக்கவக்காதால் சென்னை ஏமாற்றமடைந்தனர்.
இதையெடுத்து இன்று நடைபெறவுள்ள ஏலத்தில் சென்னை அணி அஸ்வினை வாங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் 2 கோடி நிர்ணயம் செய்யப்பட்ட அஸ்வினை எடுக்க சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் போட்டியிட்டனர். முடிவில் அஸ்வினை ரூ.7.60 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி எடுத்தது சென்னை ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.