January 30, 2018
tamilsamayam.com
குடும்பத்தை காப்பாற்ற கேஸ் டெலிவரி பாயாக வேலை பார்க்கும் ரிங்கு சிங் தற்போது கொல்கத்தா அணியில் விளையாட உள்ளார்.
ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகள் நிரந்தரமான ஒரு தொழில் செய்ய வேண்டும் என நினைப்பதுண்டு. அதுவும் வறுமையில் இருக்கும் குடும்பத்தினரை சொல்ல வேண்டியதில்லை. அப்படி வறுமையிலும், தன் லட்சியத்தை நிறைவேற்ற ஒரு புறம் கிரிக்கெட் மறுபுறம் குடும்பத்தை காப்பாற்ற கேஸ் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருபவர் ரிங்கு சிங்.
வீட்டில் இவரும், தந்தையும் கேஸ் டெலிவரி செய்கின்றனர். மற்ற 5 சகோதரர்கள் ஆட்டோ ஓட்டுகின்றனர்.கேஸ் டெலிவரி செய்ய கேஸ் குடோன் அருகே தகரத்தால் செட் அமைக்கப்பட்ட வீட்டில் அனைவரும் தங்கியுள்ளனர்.
கிரிக்கெட்டில் ஜொலிக்கும் ரிங்கு சிங் கடந்த 2009 முதல் விளையாடி வருகின்றார். உத்தரப்பிரதேச U16 மற்றும் U19 அணிக்காக விளையாடியுள்ளார். இவர் 2014ல் விஜய் ஹசாரே போட்டியில் அடுத்தடுத்த போட்டிகளில் 206, 154 ரன்கள் குவித்ததன் மூலம் அனைவருக்கும் பரிட்சயமானவர்.
கொல்கத்தா அணியில் ரிங்கு சிங்:
கடந்தாண்டு அடிப்படை விலை 10 லட்சத்திற்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டவர். இந்த ஆண்டு இவரை வாங்க கொல்கத்தா, மும்பை அணிகள் போட்டி போட்டன. கடைசியில் கொல்கத்தா அணி 80 லட்சத்துக்கு இவரை வாங்கியுள்ளது.