January 31, 2018 தண்டோரா குழு
கோவை உப்பிலிபாளையத்தில் இருந்து சித்ரா வரை மேம்பாலம் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று(ஜன 31) நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
950 கோடி ரூபாய் மதிப்பிடி செய்துள்ள திட்டதிற்கு, தற்போது 65 லட்சம் ஒதுக்கப்பட்டு மண் பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தேவைபட்டால் மேம்பாலம் கட்ட கூடுதல் நிதி ஒதுக்குவதாக முதல்வர் தெரிவித்துள்ளதாக கூறினார்.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்காக ஜப்பான் கூட்டுறவு முகமையிடமும், ஜெர்மன் கூட்டுறவு முகமையிடமும் தமிழக அரசு பேசி வருவதாகவும் தெரிவித்த அவர், அவினாசி சாலையில் அமைய உள்ள மேம்பால பணியும், மெட்ரோ ரயில் திட்டமும் ஒன்றுக்கொன்று இடையூறு ஏற்படுத்தாத வகையில் இணைந்து வடிவமைக்க அறிவுறுத்தப்பட்டதாக கூறினார்.
தற்போது உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே அமைய உள்ள பாலம் , உக்கடத்தில் இருந்து கரும்புகடை வரை மட்டுமே நடைபெறும் எனவும், ஆத்துபாலம் பகுதியில் உள்ள சுக்கச்சாவடி ஒப்பந்தம் 7 மாதத்தில் முடிவடைந்த பின்னர், மேம்பாலம் ஆத்துப்பாலம் வரை உறுதியாக விரிவாகம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் விரைவில் கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய்ம அமைவதற்கான பணிகளும் லாரி பேட்டை மாற்றி அமைக்கும் பணிகளும் நடைபெறும் எனக் கூறினார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு , அதிமுக அரசு தான் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறிய அவர், முதல்வரே கர்நாடக செல்ல முடிவெடுத்துள்ளதை பெருந்தன்மையுடன் பாராட்ட வேண்டும்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை மிரட்டியதாக வெளிதான தவகல் முற்றிலும் பொய்யானது. நடக்காத சம்பவத்தை கூறியதாகவும் விளக்கம் அளித்தார். கோவையில் மத்திய அரசு இராணுவ தளவாடம் பரிசோதனை செய்யும் கூடம் அமைந்தால் கோவைக்கு தான் பெருமை எனவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் விட்டுச்சென்ற நிலுவகை தொகையை .அதிமுக அரசு சரி செய்து, கனத்த இதயத்துடன் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதாக் தெரிவித்தவர், பேருந்து வழிதடங்களை அமைச்சர்கள் வாங்கியதாக செந்தில் பாலாஜி கூறியது ஆதாரமற்ற புகார் என குறிப்பிட்டார்