February 1, 2018
விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்நாடாளுமன்ற மக்களவை துவங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்து அருண்ஜேட்லி வாசித்து வருகிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்து அருண் ஜெட்லி பேசும்போது,
விவசாயிகள் நலனுக்காக அரசு தொடர்ந்து பாடுபடுகிறது. விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கப்படும். விவசாயிகள் நலனுக்கு அரசு பல திட்டங்களை செய்துள்ளது. கிராம பொருளாதாரத்தை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும், ஏழைகள் மற்றும் விவசாயிகள் நலன் கவனிக்கப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது எனக் கூறினார்.