July 16, 2016
தண்டோரா குழு
தனுஸ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம் வெற்றியைத் தொடர்ந்து தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் ஜெயில் போன்ற செட்டில் தொடங்கியுள்ளது. மேலும், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, ஆட்ரியா போன்றோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கப்போவதாக தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.