February 3, 2018
tamilsamayam.com
சர்வதேச ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி, நூழிலையில் ‘நம்பர்-1’ இடத்தை தென் ஆப்ரிக்க அணியிடம் இருந்து தட்டிப்பறித்தது.
சர்வதேச ஒருநாள் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை (ரேங்கிங்) பட்டியலை, ஐ.சி.சி., இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா அணி (120 புள்ளிகள்) சில தசம புள்ளிகள் வித்தியாசத்தில் ‘நம்பர்-1’ இடத்தை தென் ஆப்ரிக்க அணியிடமிருந்து தட்டிப்பறித்துள்ளது.
தென் ஆப்ரிக்க அணி (120 புள்ளிகள்) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இரு அணிகளும் தலா 120 புள்ளிகள் பெற்ற போதும் இந்திய அணி சில தசம புள்ளிகள் வித்தியாசத்தில் ’நம்பர்-1’ இடத்தை கைப்பற்றியது.
இப்பட்டியலில் இங்கிலாந்து அணி (116), நியூசிலாந்து (115), ஆஸ்திரேலியா (112) அடுத்த மூன்று இடங்களில் உள்ளன. டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி (121 புள்ளிகள்) தொடர்ந்து ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறது.