February 3, 2018
தண்டோரா குழு
ஜூனியர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கோப்பையைக் வென்றது.
ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய,ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
அந்த அணி 47.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 38.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியின் தொடக்க வீரர் மன்ஜோத் கல்ரா (101*) அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.
மேலும்,இந்திய அணி ஜூனியர் உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசும், இந்திய ஜூனியர் அணி வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில்,இந்திய ஜூனியர் அணி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட்டுக்கு சச்சின்,சேவாக் உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.