February 7, 2018
tamilsamayam.com
முன்னனி பாடகர்களாக திகழ்ந்த பாலசுப்ரமணியம், யேசுதாஸ் இருவரும் 27 வருடங்களுக்கு பின்னர் இணைந்து பாடலை பாட உ ள்ளனர்.
27 வருடங்களுக்கு முன்னர் வெளியான ‘தளபதி’ படத்தில் ‘காட்டுக் குயிலே மனசுக்குள்ளே’ பாடலை பாலசுப்ரமணியம், யேசுதாஸ் இருவரும் இணைந்து பாடியிருந்தனர். இளையராஜா இசையில் வெளியாகியிருந்த இந்த பாடல் மிகவும் பிரபலமானது.
இந்நிலையில் இருவரும் தனித்தனியாக பல பாடல்களை பாடிவந்தனர். ஒரே துறையில் இருந்தாலும் ஒன்றாக பாடும் வாய்ப்பு தற்போது தான் மீண்டும் கிடைத்துள்ளது.
தற்போது எம்.ஏ. நவ்சத் இயக்கத்தில் தமிழில் ‘கேணி’, மலையாளத்தில் ‘கிணறு’ என உருவாகி வரும் படத்தில் பாலசுப்ரமணியம், யேசுதாஸ் ஆகியோர் இணைந்து பாட உள்ளனர்.
கேரளா, தமிழ்நாடு இடையே தண்ணீர் பிரச்னை உள்ள நிலையில், இந்த படம் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.