February 7, 2018
tamilsamyam.com
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை தொடரில் கோப்பை வெல்லும் தகுதி வாய்ந்த அணியின் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அடுத்த ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இத்தொடரில் சாதிக்கும் அணி குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணித்துள்ளார்.
சொந்த மண் சாதகம்:
இதில் சொந்த மண்னில் களமிறங்கும் இங்கிலாந்து அணிக்கு முதலில் வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு அடுத்தபடியாக கோலி தலைமையிலான இந்திய அணிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மெக்ராத் கணித்துள்ளார்.
இதுகுறித்து மெக்ராத் கூறுகையில்,
“கடைசியாக சொந்த மண்னில் நடந்த 22 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி 19 வெற்றிகளை குவித்துள்ளது. இதே வெற்றி விகிதத்தை அடுத்த 12 மாதங்களுக்கும் இங்கிலாந்து அணி தொடரும் பட்சத்தில் உலகக்கோப்பையை கண்டிப்பாக வெல்ல வாய்ப்புள்ளது. அதேநேரம் இந்திய அணியும் இங்கிலாந்துக்கு கடும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை”.
கோலிக்கு நெருக்கடி:
கோலிக்கு கேப்டன் நெருக்கடியும் உள்ளது. ஆனால் இங்கிலாந்து அணியில் 4வது வீரராக களமிறங்கும் ஜோ ரூட்டுக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. அதனால் அவரின் சுதந்திரமான செயல்பாடு கோலியைவிட அவருக்கு அதிகமாகவே கைகொடுக்கும் என்றார்.