February 8, 2018
தண்டோரா குழு
சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு ரஜினி விளக்கமளித்துள்ளார்.
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் எப்போது வெளியாகும்.காலா படம் முதலில் வெளியாகுமா என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ஏப்ரல் 27ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தோம். தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து கொண்டிருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கிறோம் என்றார்.