February 8, 2018
தண்டோரா குழு
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லஸித் மலிங்கா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி வேகபந்து வீச்சாளார் லஸித் மலிங்கா தற்போது பெரிதும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில்லை. நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் லஸித் மலிங்காவை மும்பை அணி ஏலம் எடுக்காத நிலையில் அணியின் ஆலோசகராக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அண்மையில் செய்தி நிறுனத்திற்கு பேட்டியளித்த அவர்,
“மன ரீதியாக கிரிக்கெட் விளையாடுவதை நிறைவு செய்துவிட்டேன். இனிமேலும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என நான் கருதவில்லை. விரைவில் எனது ஓய்வு முடிவை நான் அறிவிக்க திட்டமிட்டுள்ளேன்.இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் நான் இன்னும் பேசவில்லை. நான் இலங்கை திரும்பியதும், எனது உடல் எவ்வாறு ஒத்துழைப்பு தருகிறது என்பதை தெரிந்து கொள்ள உள்ளூர் போட்டிகளில் மீண்டும் கலந்து கொள்வேன். ஆனால், தற்போது நான் இனி ஐபிஎல் போட்டியில் விளையாடுவதும் முடிவுக்கு வந்துவிட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் புதிய அத்தியாத்தை நான் துவங்க உள்ளேன். நான் இனிமேல் கிரிக்கெட் விளையாடாமல் கூட போகலாம்” என்றார்.