July 19, 2016 தண்டோரா குழு
மத்தியப் பிரதேசம், ரெவா மாகாணத்தைச் சேர்ந்தவர் விஜய் கந்த் லக்ஷிமி. இவரது கணவர் சந்தோஷ் விஷ்வகர்மா வாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். அதிகக் குடிப் பழக்கம் உள்ளவர்.
சண்டைகளும், சச்சரவுகளும், வாக்குவாதங்களும் இவர்களது அன்றாட வாடிக்கை. பொறுமையிழந்த இவரது மனைவி சம்பவத்தன்று, உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை ஒட்ட உபயோகப்படுத்தப்படும் பசையான ஃபெவிக்விகை தனது கணவர் தூங்கும்போது கண்களில் ஊற்றிவிட்டார்.
மறுநாள் காலை கண்விழித்த பொது கண்களைத் திறக்க முடியாததால் தனது மனைவியை உதவிக்கு அழைத்துள்ளார் சந்தோஷ். மனைவியிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காததாலும், பலமுறை தண்ணீரில் கழுவிய பிறகும் எந்தப் பயனும் இல்லாததாலும், அண்டை வீட்டாரை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக தங்களது குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று லக்ஷ்மி அனைவரையும் எச்சரிக்கை செய்துள்ளார். இதையடுத்து உதவிசெய்யப் பயந்த அக்கம்பக்கத்தினர் சந்தோஷின் நிலை கண்டு காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த அவர்கள் சந்தோஷை மீட்டு உடனே மருத்துமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வந்ததைப் பார்த்த லட்சுமி பின்வாசல் வழியாகத் தப்பிச்சென்றார். இருந்தாலும் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மருத்துமனையில் சந்தோஷுக்கு கண் இமைகளிலிருந்து பசையை அகற்றும் விதமாகத் தகுந்த அளவு சூடேற்றி உருக வைத்துப் பிரிக்கப்பட்டது என மருத்துவர் S.P.சின்க் பரிஹர் தெரிவித்தார்.
இவ்வழக்கை சொரடா காவல் நிலைய அதிகாரி R.K.பாண்டே விசாரித்து வருகிறார்.