February 10, 2018
தண்டோரா குழு
தெலுங்கு நடிகர் நாகாசைதன்யாவை நடிகை சமந்தா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், விடுமுறையை மாலத்தீவில் கழித்து வரும் சமந்தா பிகினி உடையில் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் சமாதாவை விமர்சிக்க துவங்கிவிட்டனர். ஒரு திருமணமான பெண் இப்படி உடல் முழுவதும் தெரியும்படியா உடை அணிவது என பலரும் கேட்டனர்.
இந்நிலையில், தற்போது அவர்களுக்கு பதிலடி அளித்துள்ள சமந்தா, “நான் என்ன செய்யவேண்டும் என்ற விதியை நான் தான் முடிவே செய்வேன்” என கூறியுள்ளார்.