February 13, 2018
tamilsamayam.com
இந்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுணர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 11 வது சீசனில் விளையாடும் அணிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு சமீபத்தில் முடிந்தது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
வாட்சன் பெருமிதம் :
சென்னை அணிக்காக விளையாடுவது பெருமையாக தெரிவித்துள்ள ஷேன் வாட்சன், தோனி போன்ற சிறந்த வீரரின் கீழ் விளையாடுவதை நினைத்து மிகவும் பெருமையாகவும், ஆவலோடு இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.