February 16, 2018
தண்டோரா குழு
எம்.ஆர்.ராதாவின் மகனும் நடிகருமான ராதாரவி தற்போது தமிழ் டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராதா ரவி,
ரஜினி எனது நல்ல நண்பர்,நல்லவரும் கூட. அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நினைக்கிறேன். ரஜினி சிஸ்டத்தை மாற்றுவதாக கூறியிருந்தார்,அப்படி மாற்றுவதாக இருந்தால் அதை அவர் முதலில் கர்நாடகாவில் போய் சரி செய்யட்டும். தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளட்டும் என்றார்.
மேலும்,கமல் பெரிய மனிதர்.அவர் பேசுவது அவரை பிடித்தவர்களுக்கு மட்டும்தான் புரியும்.காவி,கருப்பு என்று ஏதோ நிறங்களைப் பற்றி எல்லாம் பேசுகிறார் ஆனால் எனக்கு எதுவும் புரியவில்லை என்றார்.