February 16, 2018
tamilsamayam.com
சரியான நேரத்தில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்தால், நிச்சயமாக ஆசிய போட்டியில் பதக்கம் வெல்வேன் என இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேபாங்கில் நடக்கிறது. ஆசிய போட்டிகளின் வரலாற்றிலேயே இரண்டு நகரங்கள் இணைந்து போட்டிகளை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில் கடந்த 2006 முதல் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் ஒரு பதக்கமாவது பெற்று பெருமை சேர்ப்பவர், இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
ஆனால், கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் உள்ளார். இந்நிலையில் சரியான நேரத்தில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்தால், ஆசிய போட்டிகளில் நிச்சயமாக பதக்கம் வென்று சாதிப்பேன் என சானியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சானியா மிர்சா கூறுகையில்,
“இன்னும் சரியாக இரண்டு மாதங்களில் மீண்டும் டென்னிஸ் களத்துக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் ஒவ்வொரு முறை ஆசிய போட்டிகளுக்கு சென்ற போதும் கண்டிப்பாக பதக்கத்துடன் திரும்பியுள்ளேன். அதேபோல இம்முறையும் செல்ல முடிந்தால், கண்டிப்பாக பதக்கத்துடன் திரும்புவேன்.” என்றார்.