February 19, 2018
kalakkalcinema.com
தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. தமிழில் இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடத்தப்பட்டது.
அதேபோல் தெலுங்குவில் இதே நிகழ்ச்சி 70 நாட்களாக நடந்தது. இந்த நிகழ்ச்சியை பிரபல முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். அவருக்கு சம்பளமாக ஒரு எபிசோடுக்கு ரூ 35 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது தெலுங்குவிலும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளதாம், தொகுத்து வழங்குமாறு ஜூனியர் என்.டி.ஆரை அணுகியதற்கு அவர் முடியாது என்னிடம் ராஜமௌலி மற்றும் திரிவிக்ரம் ஆகியோர் படங்கள் இருப்பதால் நேரமில்லை என கூறி விட்டாராம். இதனால் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.