February 19, 2018
tamilsamayam.com
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றிக்கு சகால், குல்தீப் தான் காரணம் என ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. இத்தொடரை இந்திய அணி 5-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.
இந்நிலையில், இத்தொடரின், வெற்றிக்கு முக்கிய காரணமே இளம் சுழற்பந்துவீச்சாளர்களான சகால், குல்தீப் மிக முக்கிய காரனம் என ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சச்சின் கூறுகையில்,
“இந்திய அணி எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பெரிய விஷயமல்ல. அதை காப்பற்றியது, இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தான். மிடில் ஓவர்களில், சரியான நேரத்தில், சகால், குல்தீப் ஆகியோர் விக்கெட் வீழ்த்தியது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.” என்றார்.